Tuesday, May 6, 2014

வளமும் நலமும் தரும் வளர்பிறை அஷ்டமி(7.5.14) வழிபாடு!!!



யாரெல்லாம் முந்தைய மூன்று பிறவிகளுக்குள் சித்தர்களின் சீடர்களில் ஒருவராக இருந்தாரே,யாரெல்லாம் முந்தைய மூன்று பிறவிகளுக்குள் வரும் ஏதாவது ஒரு பிறவி முழுவதும் சிவவழிபாடு செய்தார்களோ அவர்கள் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்ய முடியும் என்பது சித்தர் அனுபவமொழி!

சிவனின்றி ஓர் அணுவும் அசையாது;
எல்லாம் சிவன் செயல்; 
என்ற பழமொழிகளே காலப் போக்கில் அவனின்றி ஓர் அணுவும் அசையாது;எல்லாம் அவன் செயல் என்று மாறியது;
கலியுகத்தில் நாம் ஒவ்வொருவராலுமே நமது அனைத்து கர்மவினைகளில் இருந்தும் மீள முடியும்;அதற்கு முதல் தகுதி அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்துவதும்,மது முதலான போதைப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதுமே!
தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால்,

1.நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;
2.நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;அதனால்,இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கும்;வருமானம்/லாபம்/ஊக்கத்தொகை அதிகரிக்கத் துவங்கும்;
3.அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை,  கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்;
4.வாக்குச்சனியால் அவதிப்படும் கன்னிராசியினர் அதிலிருந்து விடுபடுவர்.
5.ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் துலாம் ராசியினர்,நிம்மதி அடைவார்கள்;
6.விரையச்சனியால் சேமிக்கமுடியாமல் திண்டாடும் விருச்சிகராசியினர் அதிலிருந்து மீளத் துவங்குவார்கள்;
7.அஷ்டமச்சனியால் துன்பப்படும் மீனராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்;
8.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மேஷ ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள்;
9.அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கடகராசியினர் தெளிவான மனைநிலையை அடைவார்கள்.
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம்;
வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது;மீறினால்,வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம்.
ஜய வருடத்தின் முதல் வளர்பிறை அஷ்டமி இந்த சித்திரை மாதத்தில் 24 ஆம் நாளன்று(7.5.2014 புதன் கிழமை) அன்று வர  இருக்கிறது.
இந்த நாளில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்;
வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்;
அல்லது
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியையோ,துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலாம்;
அடுத்த வளர்பிறை அஷ்டமி: வைகாசி 22 வியாழக்கிழமை (5.6.14)காலை 11.26க்குத் துவங்கி,வைகாசி 23 வெள்ளிக்கிழமை (6.6.14) மதியம் 12.54 க்கு நிறைவடைகிறது.

ஓம்சிவசக்திஓம்

Thursday, April 10, 2014

இந்து மத திருமண சடங்குகளும், விளக்கமும் !

இந்து மத திருமண சடங்குகளும்,விளக்கமும் !
நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய் யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக
விளக்கம் அளித்துள்ளேன்..,
1.நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வே ரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்)வெட்டி நட வேண்டும் .மரத்தின் நுனியில் , முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும். பின்பு நட வேண்டிய குழி யில் வெள்ளி நாணயம் , பூ , நவ தானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண் டும்.சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டு ம். பந்தகால் நட்டவுடன் மரத் தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களு க்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக் கமாகும்.
2.பொன்னுருக்குதல்:
திருமாங்கல்யம் என்பது சுமங்கலி யின் சின்னம் ஆகும்,போற்றி பாது காக்க படவேண்டியது ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலி யாக வாழ் வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொ ல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.
3.கலப்பரப்பு:
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி ( தரையில் விரித்து ) மணப் பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாரு க்கும் வழங்குதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றா கிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத் திரம் ) ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ் சள் கல வை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்பு தல் கலப்பரப்பு ஆகும் .
4.காப்பு கட்டுதல்:
காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த ம ங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற் றை காப்பாக கட்டுவது . திரு ஸ்டி. மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வரா மல் தடுப்பத ற்கு. காப்புக் கட் டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமா அனைத் து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செ ய்வேன் என்பதை உறுதி செய்யும் சட ங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இ டையூறு வராமல் காக்கு மாறு தெய்வ த்தை வேண்டிக் கட்டப்ப டுவது ஆகும்.
5.முளைப்பாலிகை :
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வதுபோ ல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச் சட ங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தை களின் உள்ளம் தெய்வீக பண் பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின் றது .
6.தாரை வார்த்தல் :
தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந் திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது. இப்படி தெய் வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்ற னர். திருமணச்சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மண மகள் கழுத்தில் தாலி கட்டு ம் உரிமையை அடைகின்றா ன் .
” என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் ( மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோ ம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண் ணின் தந்தையின் கை , எல்லாவற்றி ற்கும் மேலாக மணப்பெண்ணின் தா யாரின் கை . இந்தவெரிசையில் கைக ளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப் பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படு ம் .
7.தாலி கட்டுவது
தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டு ம் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களி ன் புனித நிறம் ஆகும். மே லும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும். தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்ற வருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.
தாலம் பனை என்ற பனை ஓ லையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த படியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுது பட்டதால் நிரந்தரமாக இரு க்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தி னர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற் றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறு மே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விர ல் விரலாய் இருக்கும் மஞ் சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ் சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இ ன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யா ணம் செய்துகொள்வதாக அ னைவரும் கையொப்பமிட அ ந்த தாலியி னை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத் தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.
தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சில ர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.பண்டைய இல க்கியங்களில் இதை மங்கள நாண் என் று கூறப்பட்டுள்ளது.
மாங்கல்ய சரடானது ஒன்பது இழைக ளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழை களும் ஒவ்வொரு நற்குனங்களை குறி க்கிறது.
தெய்வீககுணம், தூய்மையான குணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்க ம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ள தை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போ ன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண் ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்கா கவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.
8. ஹோமம் வளர்த்தல் :
வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டு ம் . ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களை த் திருப்தி படுத்த வேண்டும் . ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத் தப்படுத்துகிறது . ஹோமப்புகை உடலுக்கு ம், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக் கும் . எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும் .
9.கும்பம் வைத்தல் :
கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம் . இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் .
கும்பவஸ்திரம்——- உடம்பின் தோல்
நூல்———————— நாட நரம்புகள்
குடம் —————————— தசை
தண்ணீர் ————————– இரத்தம்
நவரத்தனங்கள் —————— எலும்பு
தேங்காய் ————————- தலை
மாவிலை ——————– தலைமயிர்
தருப்பை ————————- குடுமி
மந்திரம் ————————– உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .
10.அம்மி மிதித்தல் :
அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பய ன்படும், பொருட்களை அரை ப்பதற்கு பயன்படும் கருவியா கும். அம்மி மிக உறுதியுடனு ம்,ஒரே இடத்தில் அசையாம ல் இருக்கு ம்.திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமி யார், நாத்தானார் மற்றும் அ னைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதை யும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என் பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.
11.அருந்ததி பார்த்தல் :
அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவ ரான வசிஷ்டர் அவர்க ளின் மனைவி யாவார்.ஏழு ரிஷிகளும்,வானில் நட்சத் திரங்களாக ஒளி வீசுகிறார்கள். இதைத் தான் நாம் துருவ நட்சத்திரம் என்கி றோம் .ஏழு நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட் சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.ஆறாவது நட்சத்திரமாக ஒளி வீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலே யே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம்.மற்ற ரிஷிகள் எல் லாம் ரம்பா,ஊர்வசி,மேனகை இவர்களிடம் சபலபட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய ம னைவிகளும்,இந்திரனனின் மேல் சபலப்பட் டவர்கள்.ஆனால் வசிஷ்டரும்,மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்ற வர்களின் மீது எந் த சபலம் இல்லாமல் வாழ்ந்த வர்கள்.
அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும்,நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரிகிறது.அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும், எண் ணங்களும்,சிந்தனைகளும் ஒன்றாக இரு க்கவேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமா கவும், கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.
12.ஏற்றி இறக்குதல் :
மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலி கள் மங்கலப் பொருட்களை ( திருவிளக்கு , நிறை நாழி , சந்தனக்கும்பா, பன்னீர்ச் செ ம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் , மஞ்சள் பிள்ளையார் போ ன்றவை ) தொட்டுச் செய்யும் சடங்கு . மேலும் அருவ நிலையிலி ருந்து மணமக்களை ஆசிர்வதிக் கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூத ங்களுக்கும் , முன்னோர்களுக்கு ம் காட்டும் மரியாதையான பாவ னை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு .
13. அடை பொரி :
பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் .பல உருவத்தைக் கட் டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நகழ்வு களால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.
14. நிறை நாழி :
நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கரு கே வைத்து வழிபட்டால் நற்பேறு கள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.
15.ஒலுசை :
ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள் அனைத்து வகைச் செல்வங்க ளுடன் கணவன் வீட்டிற்கு வரு கிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி . சிறப்பான இல்லற வாழ்வி ற்கு அத்தியாவசியமா ன பொருட்களை பொறுப்புண ர்ச்சியுடன் பெண் வீட்டார் கொ டுப்பது . ஒலுசைப் பொருட்க ளைப் பட்டிய லிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந் து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்
16.மணமகள் பொங்கலிடுதல் :
முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நட த்திக் கொடுத்த இறைவனுக் கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்க ளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும் . மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெ ளிப்படுத்துவது . புதுப்பெண் ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது . இதுதா ன் மணப்பெண்ணின் முதல் சமையல் . இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறி யே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.
17. பிள்ளை மாற்றுவது :
எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச் சாரம் . இனியும் நீங்கள் பச்சைக் குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செ யல்வடிவ உபதேசம் . பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல மு றையில் சிறப்பாக இருக்கவேண் டும் என்ற நோக்கத்தில் அனைவ ரும் ஒரு சேர வாழ்த்துவது . திரு மணத்தின் பயனே நன்மக்கட்பேறு ” மங்கலமென்ப மனைமாட்சி ம்ற்று அத்ன் நஙலம் நன்மக்கட்பேறு “ – திருவள்ளுவரின் வாக்கா கும். நன்மக்கட்பேறு பெறுவதற் காக செய்யப்படும் ஒரு சடங்கு .
18. மறுவீடு :
மணமகளின் பெற்றோரும் – உற வினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுட ன் சென்று – விருந்துண்ட் மகிழ் ந்து – உறவை வலுப்படுத்துவது . ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே – ம்றுவீடு ஆகும்.
19. கோவிலுக்கு அழைத்துச் செல்லல் :
நல்ல திருமண வாழ்க்கை வே ண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் . வேண்டுத லை நிறைவேற்றிய இறைவ னுக்கு நன்றி செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலு க்கு அழைதுதுச் செல்ல வேண்டும் .

– அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

ஒரு மனிதன், எந்த வயதில் எத்தனை முறை சுவாசித்தான் என்பதை எப்ப‍டி கண்டறிவது? – அரிய தகவல்!

ஒரு மனிதன், எந்த வயதில் எத்தனை முறை சுவாசிப்பான் என்பதை
எப்ப‍டி கண்டறிவது? – அரிய தகவல்!
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,
ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 100 ஆண்டுகள் வரை வாழ்வான்
ஒரு நிமிடத்திற்கு 16 முறை சுவாசிக்கும் மனிதன் 93 ஆண்டுகள் வரை வாழ்வான்
ஒரு நிமிடத்திற்கு 17 முறை சுவாசிக்கும் மனிதன் 87 ஆண்டுகள் வரை வாழ்வான்
ஒரு நிமிடத்திற்கு 18 முறை சுவாசிக்கும் மனிதன் 80 ஆண்டுகள் வரை வாழ்வான்
ஒரு நிமிடத்திற்கு 19 முறை சுவாசிக்கும் மனிதன் 73 ஆண்டுகள் வரை வாழ்வான்
ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கும் மனிதன் 66 ஆண்டுகள் வரை வாழ்வான்
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒரு நிமிடத்திற்கு 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
ஒரு நிமிடத்திற்கு 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
ஒரு நிமிடத்திற்கு 0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்).
இதிலிருந்து நீங்கள் என்ன‍ தெரிந்துகொண்டீர்கள் நண்பர்களே!
நாம் மூச்சுக்காற்றை எந்தளவிற்கு குறைவாக சுவாசிக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழமுடியும்.
— விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Saturday, March 29, 2014


சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
 
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.
சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
 
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.
 
மற்றுமொரு புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், ஒரு பெரும் அபவாதம் கிடைக்கப் பெற்றார். சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது.வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பூஜையைச் செய்தார். விநாயகர் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது.
 
ஸ்ரீ விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.
 
ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் முறைகளும் உண்டு.
சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.
சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம்.
 
சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்குமஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.

வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.

சமித்து

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.

சமித்து குச்சிகளும் பலன்களும்
 
 அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
 
From: Facebook சித்தர் மயம்


கருட தரிசனம்

மஹா விஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள் பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானது ஆகும்.விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் :பெரிய திருவடி"என்று அழைக்கபடுகிறார்.இவர் பெருமாளின் வாகனமாகவும் , கொடியாகவும் விளங்குகிறார்.

பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது , "வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும்விளங்குவாய் ' என்று வரமளித்தார்.கருட தரிசனம் சுப சகுனமாகும்.
கருடன் மங்கள வடிவினன்.வாகனத்தில் கருடன் வட்டிமிடுவதும்,சத்தமிடுவதும் நல அறிகுறியாக கருதப்படுகிறது.கோவிலில் கும்பாபிஷேகம் ,யாகம் , சிறப்பு நடக்கும்போது ,கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

உலகளந்த பெருமாள் வாகனம் ,உலகை காக்க தர்மத்தை நிலை நட்ட பிறவி எடுக்கும் பகவன் அமரும் பீடம் கருட தேவன்.
 
கூட்டம் சேரும் இடங்களில் எல்லாம் கருடன் வரமாட்டார்.கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது.கருட தரிசனம் பாபவிமோஷனம்.அவ்வளவு எளிதில் கருடனை காண முடியாது.


From: Facebook சித்தர் மயம
 

தங்கம் போன்று தங்க பஸ்பமும் முக்கியமானது. இது மருத்துவ குணம் கொண்டது. அதுபோல், தெய்வமாக வழிபடும் பசுவின் சாணத்தை விட சாணத்தின் பஸ்பமான விபூதிக்கு அதிக சக்தி நிறைந்தது.

மற்றவர்களுக்கு தானம் செய்யும் முன் நெற்றியில் விபூதியை பூசி கொண்டு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பிறருக்கு கொடுக்கும் தானத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

விபூதியை அதிகாலையிலோ அல்லது மாலை விளக்கு வைக்கும் நேரத்திலோ நம் வீட்டில் இருந்து விபூதியை வெளியாட்டுகளுக்கு கொடுக்கக் கூடாது. அப்படி செய்தால் ஸ்ரீமகாலஷ்மியை நம் வீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு சமமானது என்கிறது சாஸ்திரம்.

“விபூதியை அணிந்து கொண்டால் ஸ்ரீருத்திரனின் ஆசியால் சகல காரியங்களும் தடையில்லாமல் நடக்கும்“ என்று தர்மருக்கு பீஷ்மர் விபூதியின் மகிமையை பற்றி கூறினார்.

விபூதியை எந்த விரலால் தொடக்கூடாது.?

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட்கள் நாசம்.

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டுவிரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

மோதிர விரலாலும் – கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.

“மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே“

நிரஞ்சனா
© http://bhakthiplanet.com/

http://greensite.in/

http://manamakkalmalai.com/

 

மூளையும் அதன் அதிர்வுகளும்

 மருத்துவ அடிப்படையில் மூளை அதிர்வுகளை அளந்து ஆய்வு செய்வதற்கு “எலக்ட்ரோ என்ஸபலோ கிராபி – Electro –Encephalo- graphy” என்பார்கள். பொதுவாக மூளையின் அதிர்வுகள் வினாடிக்கு 1 முதல் 40 அலைகள் இருக்கும் அதை மருத்துவத்திலும், மறை பொருளிலும் எப்படி பகுத்து ஆயலாம் என பார்ப்போம்.
மறை பொருளில்
1 ”டெல்டா – Delta” 0 அலை இறைநிலை-அமைதி-சமாதி.
2 ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள் – ஞானம் –மிக ஆழ்நிலை தியானம்
3 “தீட்டா – Theta” 5 முதல் 7 அலைகள்.- சித்து (சித்தர்கள்) – ஆழ்நிலை தியானம்.
4 “அல்பா – Alpha” 8 முதல் 12 அலைகள் – அல்பா தியானம்- நமது சுற்று புறத்தின் கூர்ந்த அறிவு. மாணவர்களுக்கு மிக நல்ல தியானம்
5 “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20 அலைகள்-. நாம் சாதராணமாக விழித்து இருக்கும் நிலை.
6 “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40 அலைகள்-. நாம் பதட்டபடும் நிலை.
7 “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல். ஆய்வுக்கு அப்பாற்பட்ட நிலை
மருத்துவத்தில்
1.  ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள்.
2. “தீட்டா – Theta” 5 முதல் 7 அலைகள்.
3. “அல்பா – Alpha” 8 முதல் 12 அலைகள்
4. “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20 அலைகள்.
5. “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40 அலைகள்.
6. “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல்.

thank: http://copiedpost.blogspot.in/2012/06/blog-post.html

சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. !



மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் – சுமார் நாற்பது ஆண்டு காலம் ஆன்மீக ஆராய்ச்சி செஞ்சு , ஒரு சில முறைகளை செஞ்சு பார்க்க சொல்றார். அது சம்பந்தமா , நாம நிறைய பகிர்ந்துக்கப் போறோம்.. அதுலே , ஒரு விஷயம் இன்னைக்கு முக்கியமா… !
சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில் மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க. இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. அவங்களோட வழிகாட்டுதல் பெற , அவங்களை சந்திச்சு தொடர்பு ஏற்படுத்திகிட ஒரு அற்புதமான முறையை சொல்லியிருக்கிறார்.
பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் .
பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.
ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும்.

ஆசனப் பலகை அல்லது , தரையில் – மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் – உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு,
ஓம் சிங் ரங் அங் சிங்
என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர்.
நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் – தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் – இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை. இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.
ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் – உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் , உங்களுக்குமனபலம் கூடும்.
கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு சித்தர் தரிசனம் கிட்டும்.
எதையோ, எங்கெங்கோ தேடி – முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா…?
ஒரு சாதாரண செடி வளர்வதே – அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்…
எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட – நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில் அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்….! மிக பிரமாதமான அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..!
பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்…
Read more: http://www.livingextra.com/

Friday, March 28, 2014

நினைத்தது நடக்க தெய்வீக மோதிரம் – மிஸ்டிக் செல்வம்

March 22, 2013 தெய்வீக மோதிரம்-தயாரிப்பது எப்படி?
நினைத்தது நடக்க தெய்வீக மோதிரம் ;சொன்னவர் குரு மிஸ்டிக் செல்வம் அவர்கள்
தெய்வீக மோதிரம்-தயாரிப்பது எப்படி?
நன்றி: மிஸ்டிக் செல்வம் [ http://sadhanandaswamigal.blogspot.in/2011/08/mystic-selvam.html %5D  அவர்கள்
ஒரு வருடத்தில் சில தடவைகள் மட்டும் சூரியன்,சந்திரன்,சுக்கிரன் இம்மூன்று கிரகங்களும் ஒன்று சேரும்.அப்படி ஒன்று சேரும் கால அளவு சிலமணி நேரங்களாக இருக்கும்.அல்லது 2 1/4 நாளாக இருக்கும்.(அதாவது 54 மணிநேரம்).இந்த சேர்க்கை நேரத்தை அனுபவம் மிக்க ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.அல்லது இந்த வலைப்பூவில் தொடர்பு கொள்ளுங்கள்.மின் மடலில் உரிய நேரத்தை அனுப்புகிறோம்.
[coral+ring.jpg]
அந்த நேரத்தில் 1:1 என்ற அளவிற்கு சுத்த வெள்ளியையும் சுத்த தங்கத்தையும் சேர்த்து உருக்கி,திறப்பு உள்ள மோதிரம் செய்து முடிக்க வேண்டும்.(நல்ல அனுபவமுள்ள நகை ஆசாரியால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.அனுபவம் இல்லாதவர்களால் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து உருக்கத் தெரியாது என்பது அனுபவ உண்மை).அப்படி செய்து முடித்த மோதிரத்தில் ஒரு காரட்டுக்குக் குறையாத பவளக்கல்லை அந்த திறப்பில் பதித்துவிட வேண்டும்.அப்படி பதிப்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் பதித்துவிட வேண்டும்.
மோதிரம் செய்தவுடன் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பாதத்தில்(வீட்டிலும்)வைத்து அர்ச்சனை செய்து கையில் அணியவும்.(அணியும் நேரம் எதுவாகவும் இருக்கலாம்).அணிந்த பின் நீங்கள் எந்த தெய்வத்தை அழைத்தாலும் வரும்.
சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் பலன் கிடைக்கும்.
இம்மோதிரம் அணிந்தால் ஜனவசியம், சொல் பலிதம்,நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.
நன்றி : ஜோதிட பூமி,ஆகஸ்டு 2006
http://www.aanmigakkadal.com/2009/04/blog-post_29.html

மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்




மனிதனின் குடும்ப வாழ்க்கைக்கு உப்பும் மஞ்சளும் மிக அவசியமான ஒன்றாகும். ஆண்களுக்கு உப்பும்,பெண்களுக்கு மஞ்சளும் பலம் தரும். பெண்களின் அடக்க சக்திக்கும் மனவலிமைக்கும் மஞ்சள்தான் காரணம்.

மஞ்சளில் கறி மஞ்சள்,பொன்குறட்டுமஞ்சள்,கடுக்காய் மஞ்சள், பழுக்காய் மஞ்சள், குட மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், காட்டு மஞ்சள், குரங்கு மஞ்சள், பலா மஞ்சள், காஞ்சிரத்தின் மஞ்சள், நாக மஞ்சள் என பல வகைகள் உண்டு.

சுத்தமில்லாத பெண்களின் தொப்புள் வழியாக கெட்ட ஆவிகள் உடலுக்குள் நுழைந்துவிடும்.பிறகு அந்த பெண்ணுடன் சூட்சுமமாக உடலுறவில் ஈடுபடும். கணவனுடன் எதற்கெடுத்தாலும் சண்டை போட வைக்கும்.இது பல்லாயிரக் கணக்கான வருடங்களாக நிகழ்ந்துவரும் ஒரு நிகழ்வு ஆகும்.
தீய ஆவிகள் சாந்தி முகூர்த்தத்தின்போது படுக்கை அறைக்குள் வராமலிருக்க மணமகனுக்கும் மணமகளுக்கும் மஞ்சள்காப்புகட்டுகின்றனர் .மணமேடைகளில்  இருக்கும்போது மஞ்சள் தோய்த்த ஆடைகளை உடுத்துகின்றனர். திருமாங்கல்யக்கயிறும் மஞ்சள்தான்.
மஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி, எலுமிச்சைசாறு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம், பசுநெய்போட்டுத் தயார்செய்வது. இது நெற்றியில் வடு ஏற்படுத்தாது.
எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும் வளமான செல்வங்கள் இருந்தாலும் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக்குளிக்காததும்,அசைவ உணவு சாப்பிடுவதாலும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேற்கூறிய காரணங்களால் பெண்களின் உடலில் எதிர்ப்புக்கதிர்வீச்சுகள் கூடுதலாகி பெண்களுக்கே உண்டான வசீகரசக்தி மற்றும் ஆகர்ஷணசக்தி குறைகிறது.(தமிழ்நாட்டில் தெருவுக்கு சில முத்தழகுகள் இருப்பதன் காரணம்புரிகிறதா? தோற்றத்தில் பெண்ணாகவும், நடவடிக்கைகளில் ஆணாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்)
இயற்கையான மஞ்சள்பட்டுத்துணியில் மின்சார சக்தி உள்ளது.இரண்டு கைகளுக்கிடையில் ஒரு சிறிய மஞ்சள் பட்டுக் கைக்குட்டையை வைத்து என்ன மந்திரம் ஜபித்தாலும் அம்மந்திரத்தை ஈர்த்துக்கொள்ளும் சக்தி அக்கைக்குட்டைக்கு உண்டு.மேலும் மேலும் உள்ளங்கைக்கிடையில் வைத்து சக்தியூட்டிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நமக்குப் பாதுகாப்பு.மேற்படி உருவேற்றிய மஞ்சள்பட்டுக்கைக்குட்டையை நீரில் நனைக்ககூடாது.துவைக்ககூடாது.வேறு எந்த வகையிலும் சலவை செய்யக்கூடாது.செய்தால் மந்திரசக்தி போய்விடும்.
பெண்கள் மஞ்சள் அரைத்து உடலெங்கும் பூசி நீராடுவது நல்லது.இதனால், அவர்களுக்கு உடலில் காணும் காந்தல்,தூக்கமின்மை போய்விடும்.மேலும் உடல் சுத்தமடையும்.முகத்தில் களை வரும்.
குழந்தைகளுக்கு மஞ்சள் பூசிக்குளிக்க வைத்தால் அவர்களின் மேனி பொன்னிறமாக பளபளப்படையும்.கறுப்பாக இருந்தாலும்!!!
பெண்கள் ஆகர்ஷண சக்தி பெற ஒரு சுலப வழி:
இது ஆண்களுக்கு கண்டிப்பாக செய்யக்கூடாது.300 மி.லி.பசும்பாலைச் சுட வைக்க வேண்டும்.அதில் ஐந்துகிராம் மிளகைத் தட்டிப்போட வேண்டும். ஒரு கிராம் சுத்தமான விரலிமஞ்சள் பொடியை ( சர்வோதயாக்கடைகள்/நாட்டு மருந்து க்கடைகளில் கிடைக்கும்)பாலில் போட வேண்டும்.இரண்டு பெரிய வெள்ளைப்பூண்டு தோலுரித்துஅப்பாலில் போட்டு பின்னர் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். லேசான சூட்டில் இரண்டு ஸ்பூன் பனங்கல்கண்டு போட்டு கலக்கி இரவு படுக்கும் முன் சாப்பிட்டு வரவேண்டும்.இப்படி தினமும் செய்ய வேண்டும். இதற்கு எந்த விதப் பத்தியமும் கிடையாது.
நன்றி: ஜோதிட பேரரசர் மிஸ்டிக் செல்வம் அவர்கள்.http://sadhanandaswamigal.blogspot.in/2011/08/mystic-selvam.html

பிரச்னைகளுக்கும் நிவாரணி – ஓம் சிவசிவ ஓம்

March 26, 2013
 ஓம் சிவசிவ ஓம் – திரு.மிஸ்டிக் செல்வம் 
ஓம் சிவசிவ ஒம்
About ‘Om siva siva Om’ Manthira Speech (1hr mp3)
 om siva siva om 108 time Chat
எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள்.இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான். நமசிவாய, சிவாயநம, சிவாயசிவ,சிவசிவ :இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும். இல்லாவிட்டால்,  எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.மந்திர சக்தியும் வேண்டும்; குடும்பத்திலும் இருக்க வேண்டும்; அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!
இது சம்பந்தமாக,பல சிவனடியார்களை அணுகி,அடிபணிந்து வேண்டிக் கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது. அம்மந்திரம் தான் “ஓம் சிவசிவ ஓம்”
இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம் .ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும், எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.
இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை; ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது. அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.
முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்) பிறகு விநாயகரை வழிபட வேண்டும். பிறகு தினமும் காலை 108 முறையும், மாலை 108 முறையும் ஓம் சிவசிவ ஓம் என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரவேண்டும். ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,நோய்கள் தீர ஆரம்பிக்கும். உடனே விட்டுவிடக்கூடாது.
அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும். நம்பிக்கைதான் முதலீடு.ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்; பவுர்ணமி, அமாவாசை,சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.
எந்த மலையில் இருந்தாலும்,எந்த கடலில் இருந்தாலும்,எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும். அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்துக்கொண்டு சென்றால்,அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.
பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி;மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்;வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது. ஆனால், திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால், அப்போது மட்டும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கலாம்.
பதவி உயர்வு,பதவி வேண்டுவோர் ஞாயிறு இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் திங்கள் கிழமை நோன்புடன் இதை ஜபிக்க வேண்டு.தீராத நோய்கள் தீர செவ்வாய்க்கிழமையன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும். கல்வி, வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய புதன் கிழமைகளில் நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.
ஆத்மஞானம் பெற வேண்டின் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.
பண நெருக்கடி நீங்கவும்,செல்வ வளம் பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
கண்திருஷ்டி ,செய்வினைக் கோளாறு,மனக்கோளாறு நீங்கிட சனிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.
சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது மாத சிவராத்திரியன்று அல்லது மாதப் பிரதோஷம் அல்லது சனிப்பிரதோஷம் அன்று திருவண்ணாமலைக்கு வந்து,உடலெங்கும் விபூதி பூசி,கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து,வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு, விரதமிருந்து (சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.அப்படி கிரிவலம் செல்லும் 14 கி.மீ.தூரம் முழுக்க (சுமார் 6 மணி நேரம்) ஓம் சிவசிவஓம் என ஜபித்து வந்தாலே,ஒரு முறை இப்படிச் செய்தாலே, நமது ஊழ்வினை தீர்ந்துவிடும். நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்; மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.
 இந்தத் தகவல்களை வழங்கியவர்: அருட் திரு:டாக்டர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள். : http://sadhanandaswamigal.blogspot.in/2011/08
எக்காரணம் கொண்டும் சூரிய அஸ்தமானம் ஆன பின்பு தயிர் சேர்த்த உணவுகள் சேர்க்கக்  கூடாது.அப்படிச் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய்விடும்.

நன்றி:மிஸ்டிக் செல்வம் அவர்கள்,ஜோதிடபூமி மே,2006