இந்து மத திருமண சடங்குகளும், விளக்கமும் !
Posted on April 8, 2014 by vidhai2virutcham
இந்து மத திருமண சடங்குகளும்,விளக்கமும் !
நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய் யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக
விளக்கம் அளித்துள்ளேன்..,
1.நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வே ரில்லாமல் துளிரும் மரத்தை (
பூவரசம்
மரம்)வெட்டி நட வேண்டும் .மரத்தின் நுனியில் , முனை முறியாத மஞ்சள்,12
மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும். பின்பு நட வேண்டிய குழி
யில் வெள்ளி நாணயம் , பூ , நவ தானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட
வேண் டும்.சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டு ம். பந்தகால்
நட்டவுடன் மரத் தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி
தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை
உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களு க்கும் அறிவிக்கை
செய்து ஆசி பெறுவது நோக்
கமாகும்.
2.பொன்னுருக்குதல்:
திருமாங்கல்யம்
என்பது சுமங்கலி யின் சின்னம் ஆகும்,போற்றி பாது காக்க படவேண்டியது
ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலி யாக வாழ் வதற்கு மாப்பிள்ளை வீட்டில்
வைத்து உரிய நபரிடம் ( பொற்கொ ல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம்
செய்ய வேண்டும்.
3.கலப்பரப்பு:
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (
தரையில்
விரித்து ) மணப் பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாரு க்கும்
வழங்குதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றா கிவிட்டதற்கான அடையாள
நிகழ்ச்சி (கலம் என்பது பாத் திரம் ) ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை
( மஞ் சள் கல வை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , )
நிரப்பு தல் கலப்பரப்பு ஆகும் .
4.காப்பு கட்டுதல்:
காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த
ம
ங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற் றை காப்பாக கட்டுவது . திரு ஸ்டி. மற்றும்
அசுர சக்திகளால் இடையூறுகள் வரா மல் தடுப்பத ற்கு. காப்புக் கட் டுவதில்
இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமா அனைத் து
நிகழ்ச்சிகளையும் தடையின்றி செ ய்வேன் என்பதை உறுதி செய்யும் சட ங்காகும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இ டையூறு வராமல் காக்கு
மாறு தெய்வ த்தை வேண்டிக் கட்டப்ப டுவது ஆகும்.
5.முளைப்பாலிகை :
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது .
முளைப்பாலிகையில்
இடப்படும் நவதானியங்கள் வளர்வதுபோ ல் குடும்பமும் செழித்து வளரட்டும்
என்பதற்கான அடையாளச் சட ங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தை களின் உள்ளம் தெய்வீக
பண் பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின் றது .
6.தாரை வார்த்தல் :
தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்
திர
நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது. இப்படி தெய் வத் தன்மை வாய்ந்த நீரை
இதற்கு பயன்படுத்துகின்ற னர். திருமணச்சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை
வார்த்தல் . தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மண மகள் கழுத்தில் தாலி கட்டு
ம் உரிமையை அடைகின்றா ன் .
” என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக
கொடுக்கின்றேன்
“ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள்
மகளை இனி எங்களது மறு – மகள் ( மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோ ம்
என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை
ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின்
கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண் ணின் தந்தையின் கை ,
எல்லாவற்றி ற்கும் மேலாக மணப்பெண்ணின் தா யாரின் கை . இந்தவெரிசையில் கைக
ளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப் பதற்கு அடையாளமாக
செய்யப்படும்
சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படு ம் .
7.தாலி கட்டுவது
தாலி
என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டு ம் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள்
நிறம் இந்துக்களி ன் புனித நிறம் ஆகும். மே லும் தாலி என்பது ஒரு
பெண்ணுக்கு அடையாள சின்னமாகும். தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு
பெண்ணை பார்க்கும் பொ
ழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்ற வருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.
தாலம்
பனை என்ற பனை ஓ லையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள்
கழுத்தில் கட்டி வந்த படியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய
பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுது
பட்டதால்
நிரந்தரமாக இரு க்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தி னர்.
பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற் றாலி ஆக்கினர். ஆயின் தாலியின்
உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறு மே ஒரு விரலி மஞ்சளை
எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.
(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து,
நீரில்லாமல்
வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விர ல் விரலாய்
இருக்கும் மஞ் சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ் சள்
நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்”
ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இ
ன்னார்
முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யா ணம் செய்துகொள்வதாக அ
னைவரும் கையொப்பமிட அ ந்த தாலியி னை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்
தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.
தாலி
என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சில ர் கூறுவர்.ஆனால் அது
தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு
சம்பிரதாயமாகும்.பண்டைய
இல க்கியங்களில் இதை மங்கள நாண் என் று கூறப்பட்டுள்ளது.
மாங்கல்ய சரடானது ஒன்பது இழைக ளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழை களும் ஒவ்வொரு நற்குனங்களை குறி க்கிறது.
தெய்வீககுணம்,
தூய்மையான குணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்க ம், ஆற்றல், விவேகம்,
உண்மை, உள்ள தை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போ ன்ற ஒன்பது குணங்களும் ஒரு
பெண் ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்கா கவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண்
பெண்களுக்கு அணியபடுகிறது.
8. ஹோமம் வளர்த்தல் :
கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம் . இறைவனது திருமேனி ,
கும்பத்தில் பாவிக்கப்படும் .
கும்பவஸ்திரம்——- உடம்பின் தோல்
நூல்———————— நாட நரம்புகள்
குடம் —————————— தசை
தண்ணீர் ————————– இரத்தம்
நவரத்தனங்கள் —————— எலும்பு
தேங்காய் ————————- தலை
மாவிலை ——————– தலைமயிர்
தருப்பை ————————- குடுமி
மந்திரம் ————————– உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .
10.அம்மி மிதித்தல் :
அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பய
ன்படும்,
பொருட்களை அரை ப்பதற்கு பயன்படும் கருவியா கும். அம்மி மிக உறுதியுடனு
ம்,ஒரே இடத்தில் அசையாம ல் இருக்கு ம்.திருமண பெண் புகுந்த வீட்டில்
எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமி யார், நாத்தானார்
மற்றும் அ னைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதை யும்
எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என் பதை உணர்த்தவே அம்மி
மிதிப்பது ஆகும்.
அருந்ததி
என்பது ஏழு ரிஷிகளில் ஒருவ ரான வசிஷ்டர் அவர்க ளின் மனைவி யாவார்.ஏழு
ரிஷிகளும்,வானில் நட்சத் திரங்களாக ஒளி வீசுகிறார்கள். இதைத் தான் நாம்
துருவ நட்சத்திரம் என்கி றோம் .ஏழு நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட்
சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.ஆறாவது நட்சத்திரமாக ஒளி வீசு
ம்
வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலே யே அருந்ததி
நட்சத்திரத்தையும் பார்க்கலாம்.மற்ற ரிஷிகள் எல் லாம் ரம்பா,ஊர்வசி,மேனகை
இவர்களிடம் சபலபட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய ம னைவிகளும்,இந்திரனனின்
மேல் சபலப்பட் டவர்கள்.ஆனால் வசிஷ்டரும்,மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்ற
வர்களின் மீது எந் த சபலம் இல்லாமல் வாழ்ந்த வர்கள்.
அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும்,நம் கண்களுக்கு
ஒரே
நட்சத்திரமாக தெரிகிறது.அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும், எண்
ணங்களும்,சிந்தனைகளும் ஒன்றாக இரு க்கவேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமா கவும், கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.
12.ஏற்றி இறக்குதல் :
மணமக்களை
பாதுகக்க இரு சுமங்கலி கள் மங்கலப் பொருட்களை ( திருவிளக்கு , நிறை நாழி ,
சந்தனக்கும்பா, பன்னீர்ச் செ ம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் ,
மஞ்சள் பிள்ளையார் போ ன்றவை ) தொட்டுச் செய்யும் சடங்கு . மேலும் அருவ
நிலையிலி ருந்
து
மணமக்களை ஆசிர்வதிக் கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூத ங்களுக்கும் ,
முன்னோர்களுக்கு ம் காட்டும் மரியாதையான பாவ னை, திருஸ்டி கழிப்பதற்காக
செய்யப்படுவதும் உண்டு .
13. அடை பொரி :
பச்சரிசி
மாவினால் செய்யப்படும் அடையும் .பல உருவத்தைக் கட் டும் வகையில்
பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நகழ்வு களால் ஏற்ப்டும் பல்வேறு
திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு
கொடுக்கப்படும் அவிர் பாகம்
ஆகும்.
14. நிறை நாழி :
நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கரு கே வைத்து வழிபட்டால் நற்பேறு கள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.
15.ஒலுசை :
ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள்
அனைத்து
வகைச் செல்வங்க ளுடன் கணவன் வீட்டிற்கு வரு கிறாள் என்பதை அறிவிக்கும்
நிகழ்ச்சி . சிறப்பான இல்லற வாழ்வி ற்கு அத்தியாவசியமா ன பொருட்களை
பொறுப்புண ர்ச்சியுடன் பெண் வீட்டார் கொ டுப்பது . ஒலுசைப் பொருட்க ளைப்
பட்டிய லிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந் து வருகிறது . இது
வரவேற்க்க தக்க விசயமாகும்
16.மணமகள் பொங்கலிடுதல் :
முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக
நட
த்திக் கொடுத்த இறைவனுக் கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்க
ளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும் . மணமகள் வீட்டுப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெ ளிப்படுத்துவது . புதுப்பெண் ணின் சமையல்
நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது . இதுதா ன் மணப்பெண்ணின்
முதல் சமையல் . இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும்
என்பதற்கான அறிகுறி யே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.
17. பிள்ளை மாற்றுவது :
18. மறுவீடு :
மணமகளின்
பெற்றோரும் – உற வினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுட ன்
சென்று – விருந்துண்ட் மகிழ் ந்து – உறவை வலுப்படுத்துவது . ஒரு பெண்ணிற்கு
பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு
பக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே –
ம்றுவீடு ஆகும்.
19
. கோவிலுக்கு அழைத்துச் செல்லல் :
நல்ல
திருமண வாழ்க்கை வே ண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக
அமைந்திருக்கும் . வேண்டுத லை நிறைவேற்றிய இறைவ னுக்கு நன்றி
செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு
தம்பதிகளைக் கோவிலு க்கு அழைதுதுச் செல்ல வேண்டும் .
– அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment